45. கண் காணும் கானல் நீர் | VISIBLE MIRAGE
Description
கண்களில் கண்ணீரை வடித்துள்ளாயா?
கன்னங்கள் காய்ந்ததை கண்டுள்ளாயா?
கானல்நீர்தனை பாலைவனத்தில் கண்டுள்ளாயா?
கனலும்சினத்தை கண்களில் கண்டுள்ளாயா?
கற்பனைக் கனவுகளை கண்டிருக்கின்றாயா?
கண்முன் நழுவும் வாழ்க்கை தெரிந்ததில்லையா?
நோக்கம் ஒன்றதனைநீ கொண்டுள்ளாயா?
ஏக்கம் அத்துடனேஉனக்கு வளரவில்லையா?
தவழ்ந்துநடக்கும் போதுநீதடுக்கி விழுந்ததில்லையா?
தண்டனைக் குள்ளாகிஎன்றும் தவித்ததில்லையா?
ஏற்றமுடையோர் உனை எடுத்தாண்டுள்ளனரா?
என்றாவது அதுமாறுமென்று நம்பினதுண்டா?
கதறியழும்போது நீகாரணம் கதைத்ததுண்டா?
கதறல்உனக்காக மட்டுமென்று உணர்ந்ததுண்டா?
கவிதைஎழுத நீஆசை கொண்டதுண்டா?
காவியமே வரையும்தேடல் இருந்ததுண்டா?
அன்புதேடி நீஅலைந்த துண்டா?
அப்பாவிகளுக்கே தேவையென உணர்ந்ததுண்டா?
ஏச்சுபேச்சுகளை ஏராளமாய் அனுபவித்ததுண்டா?
ஏளனங்களோடு தாராளமாய் வாழ்ந்ததுண்டா?
மனிதர்களை நீஇங்கு கண்டதுண்டா?























